தசரா பெருவிழா 2010 SUN TV - 2

தசரா பெருவிழா 2010 SUN TV

தசரா திருவிழா அழைப்பிதழ் 2010
















Kulasai Muthuaramman Tamil Devotional MP3 Songs Mediafire Links

அன்னம் பாலிக்குந் தில்லை -திருநாவுக்கரசு சுவாமிகள்

திருச்சிற்றம்பலம்

1

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.

2

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

3

அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.

4

அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.

5

ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனைத்
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே.

6

சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.

7

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே.

8

விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்
துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே.

9

வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே.

10

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே.

11

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.


நவ திருப்பதி - திரு தேசிகன் அவர்களது பார்வையில்

திரு.தேசிகன் அவர்கள் நமது வட்டரத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு வந்து பார்த்து அனுபவித்தவற்றை நம்மிடம் அவரது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்......

http://www.desikan.com/blogcms/?item=104



மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு போகும் வழியெல்லாம் பசுமை - இருபக்கமும் வாழை பயிர்கள். கொய்யா மரங்கள், (கொய்யாவை சுற்றி அணில் கடிக்காமல் இருக்க பிளாஸ்டிக் பை கவசம்), ஜெயலலிதா கொடுத்த இலவச சைக்கிளில் மாணவிகள் ஸ்கூலுக்கு செல்வதை கடந்து சென்ற போது முதல் கோயிலை அடைந்தோம் - திருவரகுணமங்கை

திருவரகுணமங்கை கோயில் வந்தவுடன் வேனிலிருந்து ஒரே ஓட்டமாய் ஓடி கோயிலுக்குள் சென்றோம் காரணம் பலத்த மழை. திருவரகுணமங்கை என்ற கோயில் நத்தத்தில் இருக்கிறது. திருவரகுணமங்கை என்றால் யாருக்கும் தெரியாது, நத்தம் என்று சொன்னால் தான் அடையாளம் காண்பிப்பார்கள். மூலவர் விஜயாஸனப் பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க வீற்றிருந்த திருக்கோலம்.



புளிங்குடி கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்றுதெளிந்த சிந்தை அகங்கழியாதேஎன்னையாள்வாய் எனக்கருளி...



என்று நம்மாழ்வார் திருவாய்மொழில் (9-2-4, 3571) மங்களாசாசனம் செய்துள்ளார்.

இந்த கோயிலை முடித்துவிட்டு திருபுளிங்குடி சென்றோம். "நிலமகளும் மலர்மகளும் வருடும் நின் மெல்லடியை இந்தக் கொடியவினை செய்த பாவியேனும் பிடிக்க வேண்டுமென்று கூவுகிறேன். அந்தோ நீ வராதிருக்கின்றாயே" என்று நம்மாழ்வாரால் திருவாய்மொழில் (9-2-10, 3577) பாடப்பெற்ற இத்தலம் திருவரகுணமங்கையிலிருந்து 1 கிமி தூரத்தில் இருக்கிறது. சயனத்திருக்கோலத்தில் காய்சினவேந்தன். திருவயிற்றிலுருந்து தாமரைக்கொடி தனியாக கிளம்பிச் சென்று சுவற்றிலுள்ள பிரம்மாவின் தாமரைமலருடன் சேர்ந்து கொள்வதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கோயிலின் தனி சிறப்பு. வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு ஜன்னல் வழியாக உற்று பார்த்தால் காய்சினவேந்தனின் பாதங்களை தரிசிக்கலாம். ராமானுஜர் இவ்வூருக்கு வந்து பெருமாளை சேவித்துவிட்டு வெளிப்புரத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்த அர்ச்சகர் மகளைக் கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அந்த பெண் "முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளர்..." என்று நம்மாழ்வார் பாசுரத்தை சுட்டிக்காட்டி "நம்மாழ்வார் பெருமாளை கூப்பிடும் தூரத்தில் இருக்கு" என்று கூறியது இந்த கோயிலில் தான்.

மழை நின்றுவிட்டது. இரட்டை திருப்பதி என்று அழைக்கப்படும் திருதொலைவில்லிமங்கலம் என்ற இடத்திற்கு கிளம்பினோம். இங்கு இரண்டு கோயில்கள் சேர்ந்தே ஒரு திவ்வியதேசமாக கருதப்படுகிறது. முதல் கோயில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது. தேவபிரான் என்ற ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலம். இரண்டாவது கோயில் வாய்க்கால் கரையிலேயே உள்ளது. மூலவர் அரவிந்தலோசனன் என்னும் செந்தாமரைக்கண்னன், வீற்றிருந்த திருக்கோலம். இந்த கோயிலகள் இருக்கும் இடத்தில் அவ்வளவாக வீடுகள் கிடையாது. இந்த கோயில்கள் இருக்கும் இடம் முன்பு ஒரு யாகசாலையாக இருந்தது என்றும் அதனால் இந்த கோயில்களில் துவாரபாலகர்கள் கிடையாது என்று அர்ச்சகர் சொன்னார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார் ( திருவாய்மொழி 6-5-1(3271), 6-5-8( 3278 ) )

இந்த கோயிலை சுற்றி உள்ள நந்தவனத்தில் முல்லை, மகிழம்பூ, விருச்சி போன்ற பூக்கள் அழகாக வளர்ந்திருப்பதை காணலாம். (உபயம் TVS). இந்த கோயில் அருகே உள்ள குப்பை தொட்டியில் "மக்கும் குப்பை" "மக்காத குப்பை" என்று தமிழில் சுற்றுபுரசூழல் பாதுகாக்கப்படுகிறது. நகரத்தில் இருக்கும் நாம்தான் அலட்சியப்படுத்திகிறேம். ( பார்க்க படம் )

அடுத்ததாக நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-2-4, 3561) பாடப்பெற்ற ஸ்தலமாகிய திருக்குளந்தை என்ற இடத்திற்கு சென்றோம். திருக்குளந்தை என்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் பெருமாள் கோயில் என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். சோரனானன் மீது நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமாளுக்கு சோரநாதன் என்ற திருநாமம் வந்தது ( சோர நாட்டியன் ). தூய தமிழில் மாயக் கூத்தன். இங்கு இருக்கும் யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். சிரித்து போஸ் கொடுத்தது. ( பார்க்க படம் )

மகர நெடுங்குழை நாதன் இருக்கும் இடமான தென் திருப்பேரைக்கு அடுத்ததாக சென்றோம். நம்மாழ்வாரால் 11 பாசுரங்களில் பாடப் பெற்ற ஸ்தலம் இது ( திருவாய்மொழி 7-2 3359-69 ). நிகரில் முகில் வண்ணன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஸ்ரீரங்கநாதனின் அழகை முகில் வண்ணன்(அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார், இப்பெருமாளை நிகரில் முகில் வண்ணன் (அரங்கநாதனின் நிகராக அழகுடையவன் ) என்று பாடியுள்ளார். ( மகர நெடுங்குழை நாதன் என்றால் என்ன என்று ஆராய்ந்ததில் மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன் என்று பொருள் ). இந்த கோயிலில் கவிபிச்சு ஐய்யங்கார் எழுதிய ஒரு கவிதை சுவற்றில் தேர் வடிவில் எழுதியிருக்கிறார்கள். என்ன என்று புரியவில்லை. யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். திருச்சிக்கு பக்கத்தில் திருப்பேர் நகர் என்ற திவ்வியதேசம் இருப்பதால், இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைக்கிறார்கள்.

தென் திருப்பேரையிலிருந்து ஆழ்வார் திருநகரி போகும் வழியில் ஒரு கிளைப் பாதையில் 2 கீமீ சென்று மதுரகவியாழ்வார் பிறந்த இடமான திருக்கோளூர் வந்தடைந்தோம்.

"வைத்தமாநிதியாம் மது சூதனனையே யல்ற்றிகொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன" என்று நம்மாழ்வார் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இதில் இருக்கும் பெருமாள் பெயர் வைத்தமாநிதிப் பெருமாள். சயனத்திருக்கோலம். குபேரனின் தொலைந்த செல்வத்தை பாத்துகாத்து அளந்ததால் தலைக்கு மரக்கால் வைத்து படுத்துள்ளார் என்று கூறுவர். தொலைந்த செல்வத்தை கையில் மை தடவி எங்குள்ளது என்று பார்ப்பது போல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இழந்த செல்வத்தை பெற இப்பெருமாளை வழிபட்டால் இயலும் என்ற நம்பிக்கை உண்டு. மரக்கால் வைத்து பெருமாள் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்விய தேசமான திரு ஆதனூரில் மட்டுமே இருக்கிறது

திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு சென்ற போது சாய்ந்திரம் ஆகிவிட்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமானதால் ஆழ்வார் திருநகரி என்று பெயர் பெற்றது. சடகோப அந்தாதியில் ( கம்பர் எழுதியது என்று நம்பப்படுகிறது) குருகூர் என்றே எடுத்தாண்டுள்ளார். திருவழுதி வள நாட்டை குருகன் என்ற அரசன் ஆண்டமையால் அவன் நினைவாக குருகபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. குருகு என்ற தமிழ் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு.



இங்குள்ள மூலவர் ஆதிப்பிரானின் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதீகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி ஆழ்வாருடைய "கண்ணி நுண் சிறுத்தாம்பு" என்ற பத்து பாடலை பல்லாயிரம் முறை சேவித்தவுடன் நம்மாழ்வாரே நேரில் வந்து அருள நாதமுனி அவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் மூலவர் வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுரகவி ஆழ்வார் தன் சக்திகளை அளித்து உருவாக்கிய சிற்பம் என்று நம்பப்படுகிறது. சின்ன வயசில் என் அப்பாவுடன் இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இது இரண்டாவது முறை. இந்த கோயிலில் இருக்கும் புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் வீற்றிருந்தார் பின் மதுரகவி ஆழ்வார் காசியிலிருந்து திரும்பி வந்துக்கொண்டிருந்த போது வானத்தில் ஒரு ஒளி தெரிவதை கண்டு அதை நோக்கி நடந்து குருகூர் வந்ததும் ஒளி மறைந்துவிட்டது. ஊரில் ஏதாவது விசேஷம் என்று கேட்டார். அதற்கு ஊர்கார்கள் இந்த ஊர் புளிய மரத்தில் சிலகாலமாக ஒரு குழந்தை அன்ன ஆகாரமின்றி ஒரு புளிய மரத்தின் பொந்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று சொன்னார்கள். புளியமரத்தின் பொந்தில் இருந்த யோக நிலையில் இருந்த குழந்தையிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?"

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று நம்மாழ்வார் கூறியவுடன், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடனானார் என்கிறது குருபரம்பரை

இங்குள்ள புளிய மரம் 'உறங்கா புளி' என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும் ஆனால் காய்க்காது, மற்ற புளிய மரத்தை போல் இரவில் மூடிக் கொள்வதில்லை ( நான் சென்றபோது இதை கண்கூடாக பார்த்தேன் ). அங்குள்ள அர்ச்சகரிடம் ஒரு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி புளிய மரத்தின் அமைந்திருக்கும் வேலிக்குள் சென்று அதன் கிளைகளையும் அடிபாகத்தையும் தொட்டுபார்த்தேன். ஏதோ பல நூற்றாண்டுகள் பின்நோக்கி சென்ற ஒரு அனுபவம். பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பதுடன் இங்கே வந்துவிடலாம் என்று எண்ணினேன்.



கடைசியாக ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்த போது மத்தியானம் பெய்த மழையால் கோவில் முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றபோது கோஷ்டி பிரபந்தத்தை சேவித்துக்கொண்டிருந்தார்கள். கோஷ்டி முடிந்த பின் அரவணை பிரசாதம், கொடுத்தார்கள். மற்ற எல்லா கோயில்களிலும் பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்டிருப்பார் அனால் இந்த கோயிலில் இருக்கும் வைகுண்ட நாதன் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்கும் வண்ணத்தில் இருக்கிறார். இங்கு உள்ள பெருமாள் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி செல்லமாக கன்னத்தில் கிள்ளி விட்டார், அந்த வடுவை எம்பெருமான் கன்னத்தில் இன்றும் காணலாம். ஸ்ரீவைகுண்டம் மண்டபங்களில் இருக்கும் சிற்பங்கள் மிக அழகானவை. நாயக்கர், பாண்டியர்களின் கை வண்ணத்தை அதில் காணலாம். திருவேங்கடமுடையான் சன்னிதியில் ராமர், ஹனுமார் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ராமர் ஹனுமார் தோள் மேல் கை போட்டுக்கொண்டிருக்கும் சிற்பத்தை பாருங்கள் - எவ்வளவு அழகு.

வைகுண்ட நாதனை சேவித்துவிட்டு புறப்பட்ட போது மாலை 8:30.

மதுரை வந்து சேர்ந்த போதுதான் என் நண்பர் திருநெல்வேலி அல்வா வாங்கி வரச் சொன்னது நினைவிற்கு வந்தது. அவருக்கு நிஜமாகவே அல்வா தான்.

பிகு: என்னுடன் நவ திருப்பதி சுற்றி பார்க்க முடியாதவர்களுக்கு இணையத்தில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன். கீழ் காணும் சுட்டியில் கிளிக் செய்து பாருங்கள்.

நவ திருப்பதி செல்லும் வழி

அதில் ஒவ்வொரு கோயிலின் மேலும் கிளிக் செய்து கோவிலை சுற்றி பார்த்து, பெருமாளையும் சேவிக்கலாம்.

[ சில படங்கள் www.navathirupathi.org என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது ]

[ Update ]
நண்பர் திருமலை ராஜன் அவர்கள் ரத கவிதைக்கு மரத்தடியில் எழுதியிருக்கும் விளக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

கோவிலில் வரையப்பட்ட ரத பந்தனத்தை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வரிசைப்படி படித்து, பின் தேரின் உச்சியில் இருந்து நடுவரி கீழ் நோக்கிப் படித்தால் பின்வரும் கவிதை கிடைக்கிறது.

இணையொத்து வாழ்வோர்க் கிடரைத் தவிர்க்கும்
பணைகாண் சீர்செல்வம் பாலிக்குங் குணமீந்த
வாதழைக்கு மெல்லோர்க்கும் ஆந்தனமிப் பார்
வாழ் சுவாமி குழைக்காதர் துணை

இந்தக் கவிதை தமிழறிஞரும் வைணைவ இலக்கியங்களை நூல் வடிவில் கொணர்ந்தவரும், கம்பன் புகழ் பரப்பியவருமான பி.ஸ்ரீச்சாரியார் அவர்களின் தந்தை பிச்சுவையங்கார் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது.

மணப்பாடு

திருச்செந்தூர் சூரசம்ஹாறம்








பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே

அத்தனில்லாமல் ஒரு அம்மையில்லை
அத்தனில்லாமல் ஒரு அம்மையில்லை - அந்த
அம்மையில்லாமல் இந்தப் பிள்ளையில்லை

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே

பக்திப் பெருக்கில் என்தன் ஊன் உருக - அந்தப்
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்திப் பெருக்கில் என்தன் ஊன் உருக - அந்தப்
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக - என்தன்
சந்ததியே உன்தனுக்கு அடிபணிய இறைவா

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே

கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே - கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
கண்ணைத் திறந்து வைத்த கருப்பொருளே - கோவில்
கதவைத் திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட்கடலே - வந்து
என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா

சிதம்பரம் நடராஜர் திருகோவில்





வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு

சிவஸ்தலம் பெயர் திருவாலங்காடு
இறைவன் பெயர் வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர்
இறைவி பெயர் வண்டார் குழலம்மை
பதிகம் திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்
திருவாலங்காடு அஞ்சல்
அரக்கோணம் அருகில்
திருத்தணி வட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 631203

வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

ஆலய விபரம்: கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிரகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் 2006ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியன்று மிக விமரிசையாக நடைபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்: தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

குலசேகரன்பட்டிணம், அருள்மிகு முத்தாரம்மன்,வரலாறும் சிறப்பும்

குலசேகரன்பட்டிணம், அருள்மிகு முத்தாரம்மன்,வரலாறும் சிறப்பும்






ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 88 Views
விலை: ரூ.20.00

சங்கர் பதிப்பகம், 15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை - 600 049.‌ தொலை‌பேசி : 26502086

குற்றாலநாதர் கோவில், குற்றாலம்

சிவஸ்தலம் பெயர் குற்றாலம்
இறைவன் பெயர் குற்றாலநாதர், குறும்பலாநாதர்
இறைவி பெயர் குழல்வாய் மொழியம்மை
பதிகம் சம்பந்தர் - 2
எப்படிப் போவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மி. தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் குற்றாலம் சிவஸ்தலம் உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் தென்காசி. மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து தென்காசி செல்ல பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. தென்காசியில் இருந்து குற்றாலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
குற்றாலநாதர் திருக்கோவில்
குற்றாலம் அஞ்சல்
திருநெல்வேலி மாவட்டம்
PIN - 627802
courtalam location map
Map courtesy by: Yahoo Maps

குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றால அருவிக்கு அருகிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே சித்திர சபை திகழ்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்கே நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது. இந்த சித்திர சபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிர நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. மற்றும் உள்ள பல சித்திரங்களைக் காணச் சென்றால் எதைப் பார்ப்பது எதை விடுவது என்ற பிரமிப்பைத் தூண்டும் வகையில் இந்த வண்ண ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

சிவஸ்தலம் பெயர் திருநெல்வேலி
இறைவன் பெயர் நெல்லையப்பர்
இறைவி பெயர் காந்திமதி அம்மை
பதிகம் திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருநெல்வெலி நகரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
நெல்லையப்பர் திருக்கோவில்
திருநெல்வேலி
PIN - 627001

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.
கோவில் அமைப்பு: கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம்.
மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு.
மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.

திருஞானசம்பந்தர் - நமச்சிவாயத் திருப்பதிகம்

திருநல்லூர் பெருமணத்தில் இறைவன் சந்நிதியில் சம்பந்தர் அவரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில் இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் என போற்றப்படுகிறது.

1. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

2. நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

3. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

4. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

5. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

6. மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

7. நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.

8. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.

9. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

10. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

11. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
இந்தப் பதிகம் தான் திருஞானசம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசி பதிகமாகும்.

நடராஜர் கோவில், சிதம்பரம்

நடராஜர் கோவில், சிதம்பரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர் சிதம்பரம்
இறைவன் பெயர் கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
இறைவி பெயர்கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 8,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 Km தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு நடராஜர் திருக்கோவில்
சிதம்பரம் அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN - 608001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.
  • பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
  • தரிசிக்க முக்தி தரும் தலம்
  • பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
  • ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
  • அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
  • நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
  • சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
Chidambaram temple
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது. கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிறபங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்). அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது. திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.

நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை 1) திருவாலங்காடு - இரத்தினசபை, 2) மதுரை - வெள்ளிசபை, 3) திருநெல்வேலி - தாமிரசபை, 4) திருக்குற்றாலம் - சித்திரசபை.

இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை முறையே சிற்சபை (சிற்றம்பலம்), 2) கனகசபை, 3) இராசசபை, 4) தேவசபை, 5) நிருத்தசபை ஆகியவையாகும். இவற்றுள்

  1. சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் "லெய்டன்" நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.
  2. கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் "இடங்கழி நாயனார்" வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.
  3. இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
  4. தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் வேயப்பட்டுள்ளது.
  5. நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.

மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி ஒரு தனிக்கோவிலாக பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. கோவிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரி கோவிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோவில் அமைந்து விளங்குகிறது. ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி காட்சி தருகிறார். முருகனின் திரு உருவம் ஒரே கல்லினால் அமைந்ததாகும்.

சிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர். சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.

சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது. நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.












பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது “ஈண்டு வேண்டுவன வைத்தோம்” என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தினார்கள். தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக திருமருகல் என்கின்ற சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்த ஒரு வணிகனின் உயிரை மீட்டுத் தரும்படி அவன் மனைவி கதறி அழுது கேட்டுக்கொண்டதின் பேரில் அவள் பால் இரக்கப்பட்டு ” சடையாய் எனுமால் ” எனத் தொடங்கும் பதிகம் பாடி திருஞானசம்பந்தர் இறைவனிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். இறந்த வணிகனும் திருமருகல் இறைவன் மாணிக்கவண்ணர் பேரருளால் உயிர் பெற்று எழுந்தான். அதே போன்று திங்களூர் சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்ட அப்பூதியடிகள் மூத்த மகனை “ஒன்று கொலாம் ” என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடி இறந்தவனை உயிர்ப்பித்து எழுப்பிய அற்புதம் திருநாவுக்கரசரால் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிவஸ்தலமும் ஒவ்வொரு பெருமை பெற்றது.

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் அவர்கள் காலத்தில் உள்ள போக்குவரத்து சிரமங்களையும் பாராமல் இந்த கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பாடி புகழ்ந்துள்ளனர். ஒரு சில சிவஸ்தலங்களுக்கு இவர்கள் நேரில் போகாமல் இருந்த போது, இறைவனே இவர்கள் கனவிலோ அல்லது அசரீரியாகவோ கூப்பிட்டு அவர்களை வரச்செய்து இறைவன் தன் மேல் பதிகங்கள் பாட வைத்திருக்கிறார்.

இவர்கள் பாடிய பதிகங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பல ஆண்டுகளாக சிதம்பரம் கோவிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கபட்டு இருந்தன. திருமுறை கண்ட சோழன் என்றழைக்கப்படும் ராஜராஜ சோழன் காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டு திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுத்து ஒழுங்கு படுத்தப்பட்டன. சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் 7-ம் தேவார மூவர் பாடிய பதிகங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ளன. 4,5, 6-ம் திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களும், 7-ம் திருமுறையில் சுந்தரர் பாடிய பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன.

திருநாவுக்கரசர் (அப்பர்)

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் – 125

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் – 98

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் – 51

திருஞானசம்பந்தர்

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் – 219

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் – 12

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் – 43

சுந்தரர்

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் – 84

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் – 54

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் – 136

அறுபத்து மூன்று நாயன்மார்கள்


சமய குரவர்கள்

முற்காலத்தில் (~கி.பி 400-1000) தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர். நாயன்மார்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார்கள் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. இவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
சிவநெறி பூண்ட நாயன்மார்கள் பட்டியல் ஒரு பார்வையில்Tamil Om4.JPG
எண் பெயர் குலம் பூசை நாள் நின்ற நெறி
1 அதிபத்தர் பரதவர்

2 அப்பூதியடிகள் அந்தணர்

3 அமர்நீதி நாயனார் வணிகர் ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர்

5 ஆனாய நாயனார் இடையர்

6 இசைஞானியார் ஆதி சைவர் சித்திரை
7 இடங்கழி நாயனார் செங்குந்தர் குல குறுநில மன்னர்[1] [2]

8 இயற்பகை நாயனார் வணிகர்

9 இளையான்குடிமாறார் வேளாளர்

10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர்

11 எறிபத்த நாயனார்

செங்குந்தர் [3] [4]



12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் சான்றார்

14 ஐயடிகள் காடவர்கோன் குறுநில மன்னர்

15 கணநாதர் அந்தணர்

16 கணம்புல்லர்

செங்குந்தர் [5] [6]



17 கண்ணப்பர் வேடர்

18 கலிய நாயனார் செக்கார்

19 கழறிற்ற்றிவார் அரசர்

20 கழற்சிங்கர் குறுநில மன்னர் வைகாசி பரணி
21 காரி நாயனார்

செங்குந்தர் [7] [8]



22 காரைக்கால் அம்மையார் வணிகர்

23 குங்கிலியகலையனார் அந்தணர்

24 குலச்சிறையார் மரபறியார்

25 கூற்றுவர்

செங்குந்தர் குல குறுநில மன்னர் [9] [10]



26 கலிக்கம்ப நாயனார் வணிகர்

27 கோச் செங்கட் சோழன் அரசன்

28 கோட்புலி நாயனார் வேளாளர்

29 சடைய நாயனார் ஆதி சைவர்

30 சண்டேஸ்வர நாயனார் அந்தணர்

31 சத்தி நாயனார் வேளாளர்

32 சாக்கியர் வேளாளர்

33 சிறப்புலி நாயனார் அந்தணர்

34 சிறுதொண்டர் சாலியர் சித்திரை பரணி
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்

36 செருத்துணை நாயனார் வேளாளர் 8 8
37 சோமசிமாறர் அந்தணர் வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள்

செங்குந்தர் [11] [12]



39 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர் சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர்

43 திருநீலகண்டர் குயவர்

44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர்

47 நமிநந்தியடிகள் அந்தணர் வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர்

செங்குந்தர் குல குறுநில மன்னர் [13] [14]



49 நின்றசீர் நெடுமாறன் அரசர்

50 நேச நாயனார் சாலியர்

51 புகழ்சோழன் அரசர்

52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் ஆனி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர்

54 பெருமிழலைக் குறும்பர்

செங்குந்தர்[15] [16]



55 மங்கையர்க்கரசியார் அரசர் சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர்

57 முருக நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர்

59 மூர்க்க நாயனார் வேளாளர்

60 மூர்த்தி நாயனார் வணிகர்

61 மெய்ப்பொருள் நாயனார்

செங்குந்தர் குல குறுநில மன்னர்[17] [18]



62 வாயிலார் நாயனார் வேளாளர்

63 விறன்மிண்ட நாயனார் வேளாளர் சித்திரை திருவாதிரை

கந்தர் சஷ்டி கவசம்

காப்பு
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்ட்டையும் கைகூடும்
நிமலார்அருள் கந்தாசஷ்டி கவசம்தனை

குறள் வெண்பா
அமரார் இடார்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

நூல்

சஷ்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென

வசர ஹணப வருக வருக
அசுரார் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க

விரைந்தெனைக்காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்சௌவும்
உ ய்யொளி சௌவும் உ யிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலை பெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகம் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
:ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உ ந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று

உ ன்திரு வடியை உறுதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உ யிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல்காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல்காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல்காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல்காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில்நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள்தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டோரிஇத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்


கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உ ருட்டு கால்கை முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரிநாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத்

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈ:ரேழ் உ லகமும் எனக்கு உ றவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உ ன்னைத் துதிக்க உ ன் திருநாமம்
சரஹண பவணே சையொளி பவனெ!
திரிபுர பவனே திகழொளி பவனே
பாரிபுர பவனே பவமொழ்¢ பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புர்வாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உ னைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உ ன்பதம் பெறவே உ ன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உ ன் கடன்

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உ ன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உ கந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கனும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாற் காண மெய்யாம் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோaf நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
வீரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வாfக்கு உ வந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவாfகள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உ யர்கிரிகனக சபைக்கு ஓரரசே

மயில்நட மிடுவோய் மலார்அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

வாழ்க அந்தணர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

காத லாகிக் கசிந்து

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம்

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவ
பொங்கழ லுருவன் புதநா யகனால் வேதமும் பொருட்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.


மந்திர மாவது நீறு

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே.


வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே.


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


பிடியதன் உருவுமை

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

தோடுடைய செவியன்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி
காடுடைய சுடலைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே


உரை
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

பித்தாபிறை சூடீ

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.

சிவபுராணம்

திருசிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருசிற்றம்பலம்